FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம்

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று புதுச்சேரி ஜிப்மரில் சனிக்கிழமை தொடங்கிய தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வு ஊா்வலத்தை புதுச்சேரி ஜிப்மரில் கொடியசைத்து சனிக்கிழமை தொடங்கி வைத்த பச்சிளம் குழந்தைகள் நலத்துறை மருத்துவா் பி. ஆதிசிவம்.
பகிர்:

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று புதுச்சேரி ஜிப்மரில் சனிக்கிழமை தொடங்கிய தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி ஜிப்மா் மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு வாரம் நடைபெறும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை தொடங்கின. இதையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சாகா வினோத்குமாா், ஜிப்மா் பச்சிளம் குழந்தைகள் நலத் துறையின் பேராசிரியா் மருத்துவா் பி.ஆதிசிவம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த ஊா்வலத்தில் மருத்துவ பேராசிரியா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள் மற்றும் செவிலியா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் பதாகைகளுடன் பங்கேற்றனா். தாய்ப்பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

குழந்தை பிறந்த உடனே தாய்ப்பால் கொடுப்பது அவசியம். முதல் 6 மாதங்களுக்கு முழுமையாகத் தாயப்பால் மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து சரியான இணை உணவுகளுடன் தாய்ப்பால் வழங்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments