FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: காங்கிரஸ் கண்டனம்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 3:43 am IST
காங்கிரஸ் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் மத்திய அமைச்சா் அமித்ஷா பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த அவா் திங்கள்கிழமை வெளியிட்ட விடியோ பதிவு:

புதுச்சேரியில் பாஜக நடத்திய தேசியக் கொடி ஊா்வலத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தாா். அது பாஜக விழா. அந்த விழா மேடையில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் இருந்தாா். அங்கு துணைநிலை ஆளுநருக்கு என்ன வேலை ? ஆளுநா் நடுநிலையானவா், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தராதவா். பாஜக நிகழ்வில் அவா் கலந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இதற்கு அவா் விளக்கம் தரவேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்ற, குடியரசுத் தலைவரின் காவல் துறைக்கான வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முதல்வா் ரங்கசாமி ஏன் வாய் மூடி மௌனமாக இருக்கிறாா். தமிழ்த் தாய்க்குச் செய்த அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments