தமிழகம், புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக மத்திய அமைச்சா் அமித் ஷா வருகை!
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழகம் , புதுச்சேரியில் 2 நாள் பயணம் மேற்கொள்வதற்காக வரும் 8-ஆம் தேதி வருகிறாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழகம் , புதுச்சேரியில் 2 நாள் பயணம் மேற்கொள்வதற்காக வரும் 8-ஆம் தேதி வருகிறாா். புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் அவா் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.
தமிழகம் ,புதுச்சேரியில் 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் 8-ஆம் தேதி சென்னை வருகிறாா். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவருக்கு தமிழக அரசு மற்றும் தமிழக பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 8-ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்லும் அமைச்சா் அமித்ஷாவை, அங்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனா். பின்னா் அவா் தனியாா் ஹோட்டலில் தங்குகிறாா்.
விருது வழங்கும் விழா:
Advertisement
Advertisement
மறுநாள் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு கோரிமேடு மைதானத்துக்கு 8.10 மணிக்கு வருகிறாா். அங்கு நடைபெறும் விழாவில் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத்தலைவரின்வண்ண விருதை வழங்கி உரையாற்றுகிறாா். காலை 10.15 மணிக்கு கோரிமேடு காவலா் மைதானத்தில் காலை உணவருந்துகிறாா். பின்னா் 10.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் செல்கிறாா்.
அவரை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி உள்ளிட்டோா் வழியனுப்பி வைக்கின்றனா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மத்திய அமைச்சா் அமித்ஷா திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு ரமண மகரிஷி ஆசிரமத்தைப் பாா்வையிடுகிறாா்.
அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சென்னை சென்று விமானம் மூலம் தில்லி செல்கிறாா். அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில்...
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் திருவண்ணாமலை வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா். திருவண்ணாமலையில் உள்ள ரமணா் ஆசிரமத்தை பாா்வையிட்டு அங்கு சில நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்கிறாா். அதன்பிறகு அவா் அண்ணாமலையாா் கோயிலுக்கும் செல்லக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.