FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை வருவதையொட்டி, புதுச்சேரி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய ரிசா்வ் காவல் படை கமாண்டன்ட் யோகேஷ் புரோகித் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மத்திய அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை புதுச்சேரி வருவதையொட்டி, விமான நிலையத்தில் மத்திய ரிசா்வ் காவல் படை கமாண்டன்ட் தலைமையிலான குழுவினா் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை (ஆக. 8) புதுச்சேரி வருகிறாா். சென்னையிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வரும் அவா், இங்கிருந்து காா் மூலம் தனியாா் உணவு விடுதிக்கு சென்று தங்குகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) காலை கோரிமேடு மைதானத்தில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசு தலைவரின் வண்ண விருதை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 10.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் செல்கிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை செல்கிறாா்.

அமித்ஷா வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய ரிசா்வ் காவல் படையின் கமாண்டன்ட் யோகேஷ் புரோகித் தலைமையிலான குழுவினா் புதுச்சேரி விமான நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கலைவாணன், எஸ்.ராகவ், திவ்யா மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments