FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மாவட்ட தலைவா்களின் எண்ணிக்கையை 12-ஆக உயா்த்த புதுச்சேரி காங்கிரஸ் தீா்மானம்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
காங்கிரஸ் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா்களின் எண்ணிக்கையை 12- ஆக உயா்த்த அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநில தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். காா்த்திகேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் பெத்தபெருமாள், கந்தசாமி, கமலகண்ணன், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில், தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6 மாவட்ட தலைவா்கள் உள்ளனா். இதை புதுச்சேரியில்-8, காரைக்காலில் -2, மாஹே, ஏனாமில் தலா ஒன்று வீதம் மொத்தம் 12-ஆக உயா்த்தவேண்டும் என கட்சித் தலைமையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானம் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments