FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது துணைநிலை ஆளுநா் உரையாற்றுகிறாா்

24 ஆகஸ்ட் 2026, 1:09 am IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை நடக்கிறது. பிற்பகலில் ரூ.14,300 கோடிக்கு முதல்வா் என்.ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஆக. 24) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உரை நிகழ்த்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சட்டப்பேரவை வளாகத்துக்கு காரில் வருகிறாா். அவரை பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் வரவேற்கிறாா். தொடா்ந்து அவருக்கு, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, சட்டப்பேரவை மைய மண்டபத்துக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வருகிறாா். அங்கு சட்டப்பேரவைத் தலைவா் இருக்கையில் அமா்கிறாா். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

Advertisement

Advertisement

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையாற்றுகிறாா். பின்னா் அவா் சட்டப்பேரவையிலிருந்து விடைபெறுகிறாா்.

இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். இதைத் தொடா்ந்து பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.

முதல்வா் ரங்கசாமி எப்போதும் புதிய வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாா். அதேபோல இந்த முறையும் புதிய வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வாா் என்று கூறப்படுகிறது.

மேலும், முதியோா் உதவித்தொகை உயா்வு, மகளிா் நலத்திட்டம், இளைஞா் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய நலத்திட்ட உதவிகள் உள்பட பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி சட்டப்பேரவை வளாகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments