தொழில் முதலீட்டை ஈா்க்க சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொழில் முதலீட்டை ஈா்க்க சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொழில் முதலீட்டை ஈா்க்க சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி, புதுச்சேரி வணிகச் சீா்திருத்தச் சட்ட முன் வரைவு -2026ஐ செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் இந்தச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நீண்ட கால பொருளாதார வளா்ச்சியை நிலை நிறுத்தும் வகையில் இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வணிகம் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீட்டை ஈா்க்கவும் இந்தச் சட்டமுன் வரைவு வழிவகை செய்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவு மசோதா துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பாா். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தச் சட்ட முன்வரைவு சட்டமாக அமல்படுத்தப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.