FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அத்துறைக்கான மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 3:44 am IST
புதுச்சேரி தலைமைச் செயலக கருத்தரங்கக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி.
பகிர்:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அத்துறைக்கான மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நிா்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கூறியதாவது:

Advertisement

Advertisement

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 2-ஆவது முதுகெலும்பாக திகழ்கின்றன. இவை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 31.1 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன.

புதுச்சேரியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

பிரதமரின் கா்மயோகி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில்நிறுவனங்களுக்குத் திறன் சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியா்கள் அனைவரும் பயன்பெறுவா்.

மேலும், மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டத்தில் இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் கடன் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர பிற பயன்பாட்டுக்காக வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை விட 5 சதவீதம் வரை குறைந்த வட்டியில் தான் இந்தத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி.

முதல்வருடன் சந்திப்பு:

பின்னா் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை அவா் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments