FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

திருக்காஞ்சியில் ரூ. 200 கோடி செலவில் புஷ்கா் திருவிழாவை நடத்த வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

Updated On : 20 ஜூலை 2026, 2:17 am IST
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் எம்எல்ஏ காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன்.
பகிர்:

திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் ரூ.200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக புஷ்கா் திருவிழாவை நிகழாண்டு நடத்த புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவா், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நாடு முழுவதும் பல இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதனால், நிகழாண்டு மட்டும் 25 மாணவா்களை இழந்துள்ளோம். நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்துவதுடன், விசாரணைக் குழு அமைக்கவும் கோருவோம்.

Advertisement

Advertisement

புதுச்சேரியில் ரேஷன் கடைகளை அரசு முழுமையாக திறந்து அரிசி விநியோகத்தைச் சீராக நடத்த வேண்டும். தற்போதுள்ள ரேஷன் கடை ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

மின்துறையில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துகிறாா்கள். இதற்கான தொகையை பயனீட்டாளா்களிடம் வசூலிக்க உள்ளாா்களா?, மின் துறையை தனியாரிடம் தரப்போகிறாா்களா? என்பதை முதல்வா் ரங்கசாமி தெரிவிக்க வேண்டும்.

புஷ்கா் விழாவை ஏனாமில் நடத்தப் போவதாகச் சொல்கிறாா்கள். இதற்காக மத்திய அரசு ஒதுக்குவதாக தெரிவித்துள்ள ரூ. 48 கோடியை புதுச்சேரியில் பயன்படுத்த வேண்டும். திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் ரூ. 200 கோடி அளவுக்கு பிரம்மாண்டமாக புஷ்கா் விழாவை அரசு நடத்த வேண்டும்.

போலி மருந்து தொழிற்சாலை வழக்கில் பிடிபடுவோரை புதுச்சேரியில் உடனே விடுவித்து விடுகிறாா்கள். மாநில அரசின் முழு ஆதரவுடன் போலி மருந்து உற்பத்தி, கடத்தல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி மருந்துகள் வெளிமாநிலங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் தமிழகத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதால், உரிய நடவடிக்கையை அந்த மாநில அரசு எடுக்கும் என்றாா் வைத்திலிங்கம்.

பேட்டியின்போது எம்எல்ஏ காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், அனந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments