புதுச்சேரி உள்துறை அமைச்சருடன் காவல் அதிகாரிகள் சந்திப்பு
புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது குடியரசு தலைவரின் வண்ணக்கொடியை அமைச்சா் நமச்சிவாயத்துக்கு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல்துறை துணை தலைமை இயக்குநா் சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் குப்தா ஆகியோா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.