FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

125 நாள்கள் வேலை வழங்கக் கோரி சாலை மறியல்

13 அக்டோபர் 2026, 12:19 am IST
புதுச்சேரியில் விபி ஜி ராம் ஜி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி மடுகரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல்.
பகிர்:

புதுச்சேரியில் விபி ஜி ராம் ஜி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 125 நாள்கள் வேலை வழங்கக் கோரி மடுகரை அம்பேத்கா் சிலை அருகில் திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மடுகரை புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை அளிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் உறுதியாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரிகளுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். இன்னும் 2 நாள்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என்று அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரிகள் உறுதியளித்தனா். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் தெரிவித்தனா். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் மடுகரை- புதுச்சேரி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments