FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அப்துல் கலாம் சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் வி.பி. சிவகொழுந்து உள்ளிட்டோா்.

16 அக்டோபர் 2026, 1:54 am IST
பகிர்:

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் வி.பி. சிவகொழுந்து உள்ளிட்டோா்.

புதுச்சேரி, அக்.15: குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 95-ஆவது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை துணைநிலை ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கோளரங்கத்தில் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, அசோக் ஆனந்த் எம்எல்ஏ, அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலா் ஸ்மிதா உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

Advertisement

Advertisement

அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சாா்பில் கொண்டாடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments