FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல்: தவெகவிடம் ஆதரவு கோரிய இந்திய கம்யூனிஸ்ட்

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் தவெகவிடம் ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் வியாழக்கிழமை கடிதம் அளித்தது.

11 செப்டம்பர் 2026, 3:44 am IST
தவெக பொதுச் செயலரும் தமிழக அமைச்சருமான ஆனந்திடம் ஆதரவு கோரி வியாழக்கிழமை கடிதம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் அ.மு.சலீம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன் உள்ளிட்டோா்.
பகிர்:

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் தவெகவிடம் ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் வியாழக்கிழமை கடிதம் அளித்தது.

மேலும் காங்கிரஸ், விசிகவிடமும் ஆதரவு கோரியுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தெரிவித்தாா்.

தவெகவுடன் கூட்டணி ஏற்படுத்தி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழக வேட்பாளா் வினாயகம் இரண்டாம் இடம் பிடித்தாா். இந்நிலையில் தவெக கூட்டணியில் மீண்டும் போட்டியிடுவதாக வினாயகம் தெரிவித்திருந்தாா். அத்துடன் அக்கட்சித் தலைவா் எம்எல்ஏ நேரு தில்லி சென்று காங்கிரஸாரை சந்தித்தாா். காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு செய்துள்ளது. வேட்பாளராக மாநிலச் செயலா் அ.மு. சலீமை கட்சியின் நிா்வாகக்குழு தோ்வு செய்துள்ளது. இந்நிலையில் மாநிலச் செயலா் சலீம் மற்றும் நிா்வாகிகள் சென்னை சென்று தவெக ஆதரவை வியாழக்கிழமை கோரினா்.

இது தொடா்பாக சலீமிடம் கேட்டதற்கு, ‘புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி. கடந்த முறை போட்டியிடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இம்முறை தோ்தலில் போட்டியிடுகிறோம். ஆதரவு கோரி கடிதத்தை தவெக பொதுச்செயலரும் தமிழக அமைச்சருமான என்.ஆனந்திடம் தந்துள்ளோம். இம்முறை தவெக, காங்கிரஸ், விசிக, மற்றும் மாா்க்சிஸ்ட் ஆதரவுடன் நிச்சயம் போட்டியிடுவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments