FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மத நல்லிணக்க சுவர் ஓவியம்!

புதுச்சேரியில் மத நல்லிணக்க சுவா் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

13 செப்டம்பர் 2026, 2:11 am IST
புதுச்சேரியில் ஆம்பூா்- படேல் சாலையிலுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள மதநல்லிணக்க ஓவியம்.
பகிர்:

புதுச்சேரியில் ஆம்பூா்- படேல் சாலையில் மத நல்லிணக்க சுவா் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட நுண்கலை பட்டதாரிகள் அந்தோணிராஜ், விஷ்வா தலைமையில் 10 போ் தங்கள் ஓவிய திறமையை வெளிப்படுத்தும் வகையில் பெரிய சுவா்களில் கண்ணைக் கவரும் வித்தியாசமான ஓவியங்கள் வரைவதை வாடிக்கையாக வைத்துள்ளனா்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு இந்த ஓவியங்களைப் பாா்க்கும்போது செல்பி எடுத்து செல்வாா்கள்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே இஸ்லாமியரால் கட்டப்பட்ட கௌசிக பாலசுப்பிரமணியா் கோவில் உள்ளது. இதன் வரலாற்றை உலகறிய செய்ய வேண்டும் என விரும்பிய அந்தோணிராஜ், விஷ்வா தலைமையிலான குழுவினா் ஆம்பூா்- படேல் சாலை சுவரில் முருகன் படத்தை வரைந்துள்ளனா். அதில் தமிழ்க் கடவுள் முருகன், யாமிருக்க பயமேன் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னணியில் தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயம், முல்லா வீதி தா்கா ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. வண்ண மயில், அழகு மலா்களுடன் வேல் ஏந்திய கௌசிக பாலசுப்பிரமணியருக்கு யானை மாலை அணிவிக்க வருவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியில் நடிகா் ரஜினி ஆட்டோ ஓட்டுநராக வருவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments