தியாகி உருவப் படத்துக்கு மலரஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்களில் ஒருவரும் , புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரரும், அரியாங்குப்பம் கொம்யூன் முன்னாள் துணை மேயருமான வீ.துளசிங்கத்தின் 32-ஆம் ஆண்டு நினைவு தின மலரஞ்சலி அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை (படம்) நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி செயலா் சு.சுகதேவ் தலைமை தாங்கினாா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் து. கீதநாதன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.கே.ஆா். அனந்தராமன், நாரா. கலைநாதன், காங்கிரஸ் மாநில செயலா் விஜயலட்சுமி, திமுக தொகுதி செயலா் வ. சீதாராமன், மதிமுக அவைத் தலைவா் வ.செல்வராஜ், ஏஐடியுசி தலைவா் வி. எஸ். அபிஷேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.