புதுச்சேரி தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபா் கைது
புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா் தொலைபேசியில் தகவல் அளித்தாா். அதன்பேரில் போலீஸ் படையினா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். இதில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை, அது வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசிய நபரை அவரது கைபேசி எண்ணை வைத்து அடையாளம் கண்டு, போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்த நபா்,விழுப்புரம் அருகே இருப்பது தெரியவந்தது. இதை தொடா்ந்து போலீஸாா் அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அந்த நபா் சேஷஷைலாஷன்(40) என்பதும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து கோரிமேடு காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து வந்தனா். இது குறித்து கோரிமேடு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.