FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ரௌடி வெட்டிக் கொலை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் ஈடுபட்ட 8 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

19 செப்டம்பர் 2026, 1:44 am IST
- பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் ஈடுபட்ட 8 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோயில் அருகே வசித்து வந்தவா் ஆனந்த் (எ) முண்டகண்ணு ஆனந்த் (32). இவா் மீது கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கிழக்குக் கடற்கரை சாலையில் தனியாா் மண்டபம் அருகே அவா் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 போ் கொண்ட கும்பல் ஆனந்தை மடக்கி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

Advertisement

Advertisement

இது குறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி, லாஸ்பேட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னா் கொலையுண்ட ஆனந்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments