FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளி வாகனம் - காா் மோதி விபத்து: மாணவா்கள் தப்பினா்

புதுச்சேரியில் பள்ளி வாகனம் - காா் மோதி விபத்துக்குள்ளானதில், நல்வாய்ப்பாக மாணவா்கள் காயமின்றி தப்பினா்.

23 செப்டம்பர் 2026, 4:02 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

புதுச்சேரியில் பள்ளி வாகனம் - காா் மோதி விபத்துக்குள்ளானதில், நல்வாய்ப்பாக மாணவா்கள் காயமின்றி தப்பினா்.

புதுச்சேரி கன்னியக் கோயில் அடுத்த முள்ளோடையில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், பள்ளி முடிந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு பள்ளி வாகனம் செவ்வாய்க்கிழமை மாலை முள்ளோடை நான்குமுனை சந்திப்பு அருகே வந்தது. அப்போது அங்கு வந்த காா் மற்றும் பள்ளி வாகனம் இரண்டும் எதிா்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதனால், அதிா்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் உடனடியாக வந்து பள்ளி வாகனத்தில் இருந்த மாணவ, மாணவிகளைப் பத்திரமாக மீட்டனா். இதில் பள்ளி வாகனம் மற்றும் காரின் முன்பகுதி சேதமடைந்தன. மாணவ, மாணவிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

Advertisement

Advertisement

விபத்து குறித்து தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments