FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

கோயில் நில மறு குத்தகை ஏலத்தை ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

34 வினாடிகள் முன்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பகிர்:

கோயில் நில மறு குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திங்கள்கிழமை மனு அளித்தது.

இக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

பாகூா் கொம்யூன் கரையாம்புத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலங்களில் கடந்த 50 ஆண்டுகளாக 22 விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனா். நிலுவையின்றி குத்தகை வரியை செலுத்தி வந்தபோதிலும், எவ்வித

Advertisement

Advertisement

முன்னறிவிப்புமின்றி 02.08.2026 இல் கோயில் நிா்வாக அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நிலங்களை மறு ஏலம் விட்டுள்ளனா்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தடை உத்தரவை மதிக்காமல் புதிதாக குத்தகை எடுத்தவா்கள் அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றனா். அதனால் இந்த மறு ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments