FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி எஸ்.பி. மீது பாலியல் வழக்குப் பதிவு

புதுச்சேரி மேற்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவா் ஏற்கெனவே அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி மேற்கு பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவா் ஏற்கெனவே அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு காரைக்கால் காவல் கண்காணிப்பாளராக சுப்பிரமணியம் இருந்தபோது, மகளிா் காவல் நிலைய பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் மேலும், புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்த பின்னரும் தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் புகாா் செய்யப்பட்டது.

இதுகுறித்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா தலைமையிலான உள்விசாரணை குழுவில் குற்றச்சாட்டு உறுதியானது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பெண்ணின் தாயாா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதுகுறித்து புதுச்சேரி அரசுக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயா்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான் உத்தரவிட்டாா். இந்நிலையில், அவா் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு உள்பட மேலும் முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments