இயற்கை வேளாண் கண்காட்சி
விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இயற்கை வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இயற்கை வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் இயற்கை மூலிகை மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள், 350-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் மூலிகை வகைகள் இடம்பெற்றன.
இதனை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, இயற்கை மருத்துவ முகாமில் மூலிகை கஞ்சி, மூலிகை மருந்துகள் வழங்கப்பட்டன. நலமுடன் வாழ இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் பொருள்களை உண்ண வலியுறுத்தப்பட்டது.
இதில், மறைந்த நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களுக்கு காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.