அ.ம.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் சுமார் 3,200 பேர் அந்தக் கட்சிகளில் இருந்து
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் சுமார் 3,200 பேர் அந்தக் கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அண்மையில் இணைந்தனர்.
இதற்கான விழா கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. விழாவுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அ.பிரபு எம்எல்ஏ தலைமை வகித்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் கோமுகி மணியன், அவைத் தலைவர் கே.பி.பாண்டியன், மாவட்ட மாணவரணிச் செயலர் க.சீனுவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேரவை செயலர் சி.பால்ராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலையச் செயலர் பி.பழனியப்பன் எம்எல்ஏ, சேலம் புறநகர் மாவட்ட செயலர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.