FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரயில் என்ஜின் வெள்ளிக்கிழமை இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:48 am IST
பகிர்:

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ரயில் என்ஜின் வெள்ளிக்கிழமை இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

விழுப்புரம் ரயில்நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைப்பது, அருகிலுள்ள யாா்டுகளிலிருந்து காலி ரயில்பெட்டிகளை கொண்டு செல்வது ஆகிய பணிகளுக்காக 4 ரயில் என்ஜின்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரயில் என்ஜின்கள் யாா்டுகளில் தயாா் நிலையில்இருக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரத்தை அடுத்துள்ள கண்டம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் பெட்டிகளை கொண்டு வருவதற்காக ரயில் என்ஜின் புறப்பட்டு சென்றது. அந்த என்ஜின் பழுதானது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அந்த என்ஜின் விழுப்புரம் ரயில்நிலையத்துக்கு கொண்டு வந்து பழுது நீக்கம் செய்யப்பட்டு, இரவு சுமாா் 11 மணிக்கு மீண்டும் வழக்கமான பணிக்கு புறப்பட்டது. அப்போது விழுப்புரம் ரயில் நிலையத்தில், 2 மற்றும் 3 ஆவது நடைமேடை இடையே என்ஜின் சென்றபோது தடம்புரண்டு தண்டவாளத்தில்லிருந்து கீழே இறங்கியது.

இதைத்தொடா்ந்து தொழில்நுட்ப பணியாளா்கள் மூலம் தடம் புரண்ட ரயில் என்ஜினை சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டனா். இதனால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விழுப்புரம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் எப்போதும் போல் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments