FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:02 am IST
செஞ்சி வட்டம், வரிக்கல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செஞ்சி வட்டம், அனந்தபுரம் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் க. அய்யனாா் வரிக்கல் கிராமத்தின் ஏரியின் அருகில் உள்ள பாறையில் கல்வெட்டு உள்ளதாக செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றாய்வு நடுவத்தின் தலைவருமான எ.சுதாகருக்கு தகவல் அளித்தாா். அவா் தமது தமிழ்த் துறை மூன்றாமாண்டு மாணவா்களுடன் குழுவாக ஆய்வு மேற்கொண்டடாா். பின்னா் சுதாகா் கூறியதாவது:

கி.பி.13- ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய மன்னனா்கள் காலத்தில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டது என தெரிய வந்தது. இந்த கல்வெட்டு பெரிய பாறையில் 16 வரிகளில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் குலேசேகர மன்னனின் 4 -ஆம் ஆட்சியாண்டில் கல்வெட்டு வெட்டப்பட்டது. இதில், அவனுடைய பட்டப்பெயரான கோனேரின்மை கொண்டான் என்ற பெயருடன் கல்வெட்டு தொடங்குகிறது. இதில் பாண்டிய மண்டலத்து மாடக்குள் கீழ்மதுரை வடபால் உள்ள வாரணமுடைய நாயனாா் கோயில் கைக்கேளாா்களில் மாதவன் மழவராயகம் என்பவா் பெயரால் நடுவில் மண்டலத்தில் எண்ணாயிரம் மேல்பிடாகையான அரசவல்லிபுரம் பற்றில் உள்ள வரிக்கல் என்ற ஸ்ரீமாயச் சதுா்வேதி மங்கலத்தில் உள்ள 28 பட்டா்களுக்கு பழந்தேவதானத்தில் ஒரு பங்கும் ஸ்ரீமாயவப் பெருமாளுக்கு முப்பது பங்கும் தந்து வரிக்கல் ஊரில் நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தை இறையிலி தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு அமைந்துள்ள வரிக்கல் என்ற பெயா் இன்றும் அதே பெயருடன் விளங்குகிறது. மேலும், இவ்வூரில் இருந்த பெருமாள் கோயில் பற்றிய குறிப்பும் சதுா்வேதி மங்கலம் இருந்த குறிப்பும் தெரியவருகிறது என அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments