விஜயகாந்த் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்
உளுந்தூா்போட்டை அருகே தேமுதிக நிறுவனா் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, நலிந்தோருக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
உளுந்தூா்போட்டை அருகே தேமுதிக நிறுவனா் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, நலிந்தோருக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
உளுந்தூா்பேட்டை தெற்கு ஒன்றியம், எலவனாசூா்கோட்டையில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றியச் செயலா் திருமால் தலைமை வகித்தாா். மாவட்ட தேமுதிக செயலா் கருணாகரன், துணைச் செயலா் குழந்தைவேல் ஆகியோா் விஜயகாந்த் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அவா்கள் நலிந்தோருக்கு நல உதவிகளையும் வழங்கினா்.
நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், ராஜ்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் சேகா், சந்திரகுமாா், முருகன், அன்பழகன், பெரியசாமி, பரசுராமன், பிரகாஷ், சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.