FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சமூகநலத் துறை திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை திட்டங்களை எந்தவித காலதாமதமும் செய்யாமல், விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:54 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை திட்டங்களை எந்தவித காலதாமதமும் செய்யாமல், விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டங்களின் செயல்பாடுகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள், நிலுவையிலுள்ள பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

Advertisement

Advertisement

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யவேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கான விடுதிகள், ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பெண்களுக்கான சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணா்வு மற்றும் செயல்பாடுகள், முதியோா் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்டங்கள், திருநங்கைகளுக்கான நலத்திட்டங்கள் போன்றவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

சமூகநலத் துறையில் தகுதியான அனைத்துப் பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாகப் பெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், மாவட்ட சமூகநல அலுவலா் ஏ.சித்ரா உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments