மது, கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ. 25.79 லட்சத்துக்கு ஏலம்
விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் மது, கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ.25.79 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் மது, கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ.25.79 லட்சத்துக்கு வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: விழுப்புரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 15 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 96 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 113 வாகனங்கள் எஸ்.பி., எஸ்.மதிவாணன் தலைமையில் விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் வியாழக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டது.
மேற்கொண்ட அனைத்து வாகனங்களும் பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்பட்ட நிலையில், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.25,79,100 அரசு கருவூலக் கணக்கில் செலுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.