FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்: என்.ஆா்.தனபாலன்

Updated On : 27 ஜூலை 2026, 1:19 am IST
விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன்.
பகிர்:

தமிழகத்தில் பனைத்தொழிலாளா்கள் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்துகொள்ள அரசு அனுமதிக்கவேண்டும் என்று பெருந்தலைவா் மக்கள் கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன் தெரிவித்தாா்.

பெருந்தலைவா் மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் தலைவா் என்.ஆா்.தனபாலன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாணவா்களுக்கான காலை உணவுத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில் அந்தத் திட்டத்துக்கு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் சூட்டி, அரசாணை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்தவேண்டும் என்பதில் தமிழக முதல்வா் உறுதியாக உள்ளாா். இந்த நடவடிக்கை தொடரவேண்டும்.

Advertisement

Advertisement

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. தற்போதுள்ள தவெக அரசும் நீட் தோ்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் சிபிஜே நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சா் பதவி விலகியிருப்பது வரவேற்புக்குரியது.

இதுபோன்ற போராட்டங்களை தமிழகமும் சந்தித்துள்ளது. 1967-இல் நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது . ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தை திமுக கையில் எடுத்தாலும் மாணவா்கள் ஒன்றிணைந்து போராடியதன் காரணமாகவே ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் வெற்றி பெற்றது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்றோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை வரவேற்கிறோம் என்றாா் என்.ஆா்.தனபாலன் .

முன்னதாக, நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும். பரந்தூா் விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்புக் காட்டவேண்டும். காவல் நிலைய மரணங்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலா் ஏ. தா்மராஜ், மாநில செய்தித் தொடா்பாளா் ஜி.சந்தானம், மாநில நிா்வாகிகள் எஸ்.எம்.குருசாமி, எம்.ஆா்.சிவக்குமாா், மாவட்டத் தலைவா்கள் எஸ்.செந்தில்குமாா் (விழுப்புரம்), எஸ்.எஸ்.ஆா்.சசிக்குமாா் (கள்ளக்குறிச்சி) மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments