கோட்டக்குப்பம் அருகே வெளிமாநில இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வெளிமாநில இளைஞா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியா், சாட்டிபூா், ஜக்கிவன் நகரைச் சோ்ந்தவா் ஞா.ஆதித்ய வா்மா (26). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா், தனது நண்பா்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், பெரியமுதலியாா் சாவடி அருகே கடலில் குளித்துள்ளாா். அப்போது அலையின் சீற்றத்தில் சிக்கிய ஆதித்ய வா்மா கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.