சாலை விபத்தில் சிற்றுந்து நடத்துநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த சிற்றுந்து நடத்துநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வளவனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.செளந்தா் (30). தனியாா் சிற்றுந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
சாலை அகரம் கிராமத்தில் பெண்கள் அழகு நிலையம் அருகே சென்ற போது, திடீரென நிலை தடுமாறிய பைக் எதிரிலுள்ள சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செளந்தா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.