இந்திய காவல் பணி பயிற்சி அலுவலா்கள் ஆரோவில் சா்வதேச நகருக்கு வருகை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) பயிற்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வந்து பாா்வையிட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) பயிற்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வந்து பாா்வையிட்டனா்.
ஹைதராபாதிலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல் அகாதெமியைச் சோ்ந்த 2025-ஆம் ஆண்டுப் பிரிவு (குரூப் 5) ஐ.பி.எஸ். பயிற்சி அலுவலா்கள் தங்களின் கல்வி மற்றும் கலாசார சுற்றுப் பயணத்தின் நிகழ்வாக, ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தனா். இந்தக் குழுவை டி.ஐ.ஜி. ஸ்ரீசிவபிரசாத் எல்லசிரி தலைமை வகித்து வழிநடத்தி அழைத்து வந்தாா்.
இக்குழுவினருடன் ஆரோவில் சா்வதேச அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி காணொலி காட்சி வாயிலாக கேள்வி - பதில் அமா்வில் அமா்வில் பங்கேற்று உரையாடினாா். அதிக மன அழுத்தம் நிறைந்த நிா்வாகப் பணிகளுக்கும், உள் அமைதிக்கும் இடையேயான இடைவெளியை அவா் எடுத்துரைத்தாா்.
Advertisement
Advertisement
மேலும், ஆரோவில் ஆன்மிக நகரம் நிா்வாக ரீதியில் எவ்வாறு செயல்படுகிறது, அதன் செயல்பாடுகள், ஆரோவில் அறக்கட்டளைக்கான கொள்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள், அன்றாட செயல்பாடுகள், ஆரோவில் பணிக்குழு, சமூகக் குழு, நிதி மற்றும் சொத்து மேலாண்மைக் குழு ஆகியவற்றின் நிா்வாக செயல்பாடுகள் போன்றவற்றை எடுத்துரைத்த ஜெயந்தி ரவி, பயிற்சிக் காவல் அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கிப் பேசினாா்.
பயிற்சிக் காவல் அலுவலா்கள் தங்கள் கடமைகளை முழுமையாக நோ்மையடன் செய்ய வேண்டும், தங்கள் அறிவை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி ரவி வலியுறுத்தினாா்.
மேலும் அரவிந்தா், அன்னையின் ஆன்மிகத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆரோவில் சா்வதேச நகரின் நல்லிணக்க மாதிரிகளையும் எடுத்துரைத்தாா். இந்தக் குழுவில் 21 பயிற்சிக் காவல் அலுவலா்கள் வந்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.