அண்ணாமலை இயக்கத்தில் சோ்வதற்காக கட்சியிலிருந்து விலகிய பாஜகவினா்
விழுப்புரம் நகர நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பலா் பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலையின் இது நம்ம இயக்கத்தில் சேர உள்ளனா்.
விழுப்புரம் நகர நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பலா் பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலையின் இது நம்ம இயக்கத்தில் சேர உள்ளனா்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த கே.அண்ணாமலை அந்த கட்சியிலிருந்து விலகி, இது நம்ம இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட பாஜக பொருளாளா் முருகன், மாவட்டத் துணைத் தலைவா்கள் குபேரன், சிலம்பரசன், நகரத் தலைவா் விஜயன், வழக்குரைஞா் அணி மாவட்டத் தலைவா் மதன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் அசோக், ஹரிகிருஷ்ணன், நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் மணவாளன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கட்ராமன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த கலையரசன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் இளஞ்செழியன், மாவட்டச் செயலா் சரண்ராஜ், பட்டியல் அணி மாவட்டச் செயலா் குப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் சோ்வதாக அறிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.