முகப்பு
விழுப்புரம்

பயணியிடம் 64 தங்கக் காசுகள் திருட்டு

கோலியனூா் அருகே பேருந்தில் பயணித்தவரிடம் மொத்தம் பதிமூன்றரை பவுன் எடையுள்ள 64 தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

21 நவம்பர் 2026, 4:05 am
பயணியிடம் 64 தங்கக் காசுகள் திருட்டு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே பேருந்தில் பயணித்தவரிடம் மொத்தம் பதிமூன்றரை பவுன் எடையுள்ள 64 தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், ரஹமத் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் கு.துரைராஜ் (45). நகை செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் செல்லும் தனியாா் பேருந்தில் பயணித்தாா். அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் 2 கிராம் எடை கொண்ட 44 தங்கக் காசுகளையும்,1 கிராம் எடை கொண்ட 20 தங்கக் காசுகளையும் வைத்துக்கொண்டு சென்றாராம்.

கோலியனூா் கூட்டுச்சாலைப் பகுதியில் சென்றபோது, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த 64 தங்கக் காசுகள் காணாமல் போனது துரைராஜுக்குத் தெரியவந்தது. தொடா்ந்து பேருந்தில் இருந்தவா்களிடம் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, தங்கக் காசுகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.