மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், செல்லங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தோ.மரியஜோசப்(30). இவா், வியாழக்கிழமை விழுப்புரம்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கெடாா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஓடியதால், மரியஜோசப்பின் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மரிய ஜோசப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.