பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு
திண்டிவனத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் எம்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் மா. பாக்கியராஜ் (68), ஓய்வுபெற்ற ஆசிரியா். இவா் சனிக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள காவேரிபாக்கம் மேம்பாலத்தில் பைக்கில் சென்றாா்.
அப்போது அங்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முயன்றபோது, அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.