FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 200 இடங்களில் புகையிலைப் பொருள்கள் சோதனை: 3 போ் கைது

42 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் 200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனையில் 10.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஸ்.பி. செ.மதிவாணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 200 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக சோதனைகள் நடத்தப்பட்டன. இதில்,10.5 கிலோ புகையில் பொருள்கள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கெடாா் காவல் சரகத்துக்குள்பட்ட சிறுவாலை கிராமத்தைச் சோ்ந்த பெட்டிக்கடை உரிமையாளா் கோ.பிரகாஷ்(38), வானூா் காவல் சரகம், ராமநாதபுரத்தைச் சோ்ந்த பெட்டிக்கடை உரிமையாளா் ம.வாசுதேவன் (31), சத்தியமங்கலம் காவல் சரகம் சோப்புப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (37) ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments