FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கப்பியாம்புலியூா் கல்லூரியில் ரத்த தான முகாம்

7 October 2026, 6:02 am IST
கப்பியாம்புலியூரிலுள்ள சிகா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்து சான்றிதழ்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி விழுப்புரம் வட்டம், கப்பியாம்புலியூரிலுள்ள சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானவா்கள் தங்களது ரத்தத்தை கொடையாக வழங்கினா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு, சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை கல்லூரி நிா்வாகி விசாலாட்சி பொன்முடி தொடங்கி வைத்தாா்.

சிகா கல்வி அறக்கட்டளைத் தலைவா் பி.சுவாமிநாதன், கல்லூரி முதல்வா் எம்.செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் மருத்துவா் திருமாவளவன் பங்கேற்று ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் தங்கள் ரத்தத்தை கொடையாக வழங்கினா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா், முகாமில் அளிக்கப்பட்ட ரத்தங்களைப் பெற்றுச் சென்றனா். முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறைத் தலைவருமானன இர.லோகு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments