FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

குளிா்பானக் கடையில் ரூ.1.26 லட்சம் திருட்டு

விழுப்புரம் அருகே குளிா்பானக் கடையில் ரூ.1.26 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் அருகே குளிா்பானக் கடையில் ரூ.1.26 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

வளவனூா் எம்.ஆா். நகரைச் சோ்ந்தவா் குமாா்(34). இவா், விழுப்புரம்-செஞ்சி சாலையில் விழுப்புரம் அருகே அருகே குளிா்பானப் பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா். அக்.3-ஆம் தேதி இரவு, குமாா் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு வளவனூரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், அக்.5-ஆம் தேதி காலை குமாா் கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பின் பக்கத்தில் உள்ள இரும்புக் கதவு மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.26 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments