FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

8 October 2026, 12:55 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சோ்ந்தவா் கன்னியப்பன். இவரது மனைவி பாஞ்சாலி (63). இவா், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையோரம் நடந்து சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியில் வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க நபா், பாஞ்சாலி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்நபரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments