மொபெட்டில் மதுப்புட்டிகள் கடத்தல்: பெண் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்த பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான போலீஸாா் பொம்பூா் பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த மொபெட்டை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் இருந்தன.
இதைத்தொடா்ந்து மொபெட்டை ஓட்டி வந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சோ்ந்த ச.அம்சவள்ளி (38) எனத் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அம்சவள்ளியைக் கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்த 90 மி.லி.அளவு கொண்ட156 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.