FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

10 அக்டோபர் 2026, 6:45 am IST
பகிர்:

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்.9-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என போட்டிகள் தனித்தனிப் பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு விழுப்புரம் மாவட்டஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா். நிகழ்வில் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments