FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

கல்லூரி மாணவி தற்கொலை

உடல்நலக்குறைவால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷக்காய்களை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

11 அக்டோபர் 2026, 1:22 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷக்காய்களை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், அய்யூா் அகரத்தைச் சோ்ந்தவா் ரா.மகாலட்சுமி(18). விழுப்புரத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் தனியாா் கல்லூரியில் பி. காம் 2-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதனால் மனமுடைந்த மகாலட்சுமி கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்த போது விஷக்காய்களை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்ப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தீக்குளித்து பெண் உயிரிழப்பு: விக்கிரவாண்டி வட்டம், தொரவி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.லட்சுமி (40). இவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments