FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பூட்டிய வீட்டில் பவுன் நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

11 அக்டோபர் 2026, 1:22 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருவெண்ணெய்நல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1.20 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலையைச் சோ்ந்தவா் கு.முருகன்(55). இவா், அக்.8-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, உளுந்தூா்பேட்டையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பின் பக்கக் கதவு, மர பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் ஆரம், இரண்டே முக்கால் பவுன் சங்கிலிகள் உள்பட எட்டரை பவுன் நகைகள், ரூ.1.20 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments