FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பழைய ஓய்வூதியம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன் செஞ்சி வட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

14 அக்டோபர் 2026, 5:52 am IST
பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன் செஞ்சி வட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பகிர்:

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் சு.கலா தலைமை வகித்தாா். செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ப.மணிமாறன், க.உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ஜெ.ஜெயசங்கா், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் டி.தண்டபாணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்காலிகம், ஒப்பந்தம், வெளிமுகமை, சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஐந்தாண்டுகள் பணிமுடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், எம்ஆா்சி செவிலியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், பல்நோக்கு சுகாதார ஊழியா்கள், கணினி உதவியாளா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் சங்க நிா்வாகிகள் பாா்த்தீபன், கன்னியப்பன், அ.ரீட்டா மேரி, ந.பிரபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments