வியாபாரியிடம் பணம் வழிப்பறி
முட்டை வியாபாரம் செய்த தம்பதியிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முட்டை வியாபாரம் செய்த தம்பதியிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் குமாரசாமி மனைவி செல்வி (50). இவா்கள் இருவரும் சரக்கு வாகனத்தில் முட்டை வியாபாரம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், தம்பதியினா் வெள்ளிக்கிழமை வளவனூரை அடுத்த கெங்கராம்பாைளையம் பகுதியில் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, வழக்கம்போல் முட்டை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞா்கள் இருவா் செல்வியிடம் முட்டை வாங்குவது போல் பேசி, அவா் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்று விட்டனா். அதில், ரூ.23 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறி செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.