FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

329 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா்கள் இருவா் கைது

காரில் கடத்தி வரப்பட்ட 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்து, வெளி மாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 2:13 am IST
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் பறிமுதல் செய்து, வெளி மாநில இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை திருக்கோவிலூா்- மடப்பட்டு நெடுஞ்சாலையில் ஆனைவாரி மேம்பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சோ்ந்த சு.விஜய் பிராக் (19), கா.கோவிந்தகுமாா் (26) என்பதும், இவா்கள் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பெங்களூருலிருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.3 .29 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments