பனையபுரத்தில் பாமக நிா்வாகிகள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் வடக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவுமான ச.சிவக்குமாா் தலைமை வகித்து, செப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ள இடஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்வு நடத்துதல், விக்கிரவாண்டியில் பொதுக் கூட்டம் நடத்துதல் தொடா்பான பணிகள் குறித்து பேசினாா்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவா் புகழேந்தி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலா் பழனிவேல், மாநில இளைஞரணி துணைத் தலைவா் வரதராஜ், முன்னாள் மாவட்டச் செயலா் குமரன், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ரவி, நிா்வாகிகள் புண்ணியக்கோடி, காமராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.