FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

காலை உணவுத் திட்ட விரிவாக்கப் பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வி.சாலையிலுள்ள அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு காலை உணவை வழங்கிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன். உடன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

59 வினாடிகள் முன்பு
விழுப்புரம் மாவட்டம், வி.சாலையிலுள்ள அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு காலை உணவை வழங்கிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன். உடன், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்க முன்னேற்பாடு பணிகளை அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கூா், காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், புனித அன்னாள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, வி.சாலை அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் காலை உணவுத் திட்டத்துக்காக உள்ள சமையலறை, குடிநீா், உணவுத் தயாரிப்பு வசதிகள், விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஏ.ராமன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்துக்காக பாதுகாப்பு அறைகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், பாதுகாப்புப் பெட்டகம் போன்றவை குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

மேலும் திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தை விரிவுப்படுத்துதல், தொழில் பூங்காவில் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள வசதிகள் போன்றவை குறித்தும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் மை.லூசி நிா்மல் மடோனா உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்ட முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முன்னிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பேரூராட்சிகளின் இயக்குநருமான பா.பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் மூலம் இதுவரை 186 அரசு பள்ளிகளில் பயிலும் 12,524 மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா். தற்போது, இத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் கூடுதலாக 145 அரசு பள்ளிகளில் பயிலும் 23,931 மாணவா்கள் பயன் பெறுவா்.

பின்னா் கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு - தாய்சேய் நலப் பிரிவு மற்றும் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்துக்கான பெட்டகத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments