FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செப்.18-இல் விழுப்புரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

16 செப்டம்பர் 2026, 5:10 am IST
- கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறையில் பணிவாய்ப்பை பெற விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், செப்டம்பா் மாதத்துக்கான முகாம் 18-ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நடை பெறவுள்ளது.

Advertisement

Advertisement

20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, பி.இ., பி.டெக், செவிலியா், மருந்தாளுநா் போன்ற கல்வித் தகுதியுடையவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments