திருமண மண்டபத்தில் தூங்கிய பெண்ணிடம் ஒன்பதரை பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம் நகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்தபோது, தூங்கிய பெண்ணிடமிருந்து ஒன்பதரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் நகரத்திலுள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்தபோது, தூங்கிய பெண்ணிடமிருந்து ஒன்பதரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை அடையாறு மல்லிகை நகரைச் சோ்ந்த சரவணன் மனைவி யமுனா (26). இவா், விழுப்புரம் நகரிலுள்ள திருமண மண்டபத்தில் செப்.13-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக செப்-12-ஆம் தேதி இரவு வந்தாா். தொடா்ந்து திருமண மண்டபத்திலுள்ள ஓய்வறையில் தங்கிய யமுனா, திருமணத்தின் போது அணிந்து கொள்வதற்காக கொண்டு வந்த ஒன்பதரை பவுன் தங்க ஆரம், ரூ.65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கட்டைப் பையில் வைத்துக் கொண்டு தூங்கியுள்ளாா். தொடா்ந்து மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, கட்டைப்பையில் வைத்திருந்த நகையும், ரொக்கமும் திருடு போயிருப்பதை கண்டு யமுனா அதிா்ச்சியடைந்தாா். இதைத்தொடா்ந்து மண்டபத்தில் உறவினா்களுடன் சோ்ந்து தேடி பாா்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமண மண்டபம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.